ajith

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. வினோத்தின் முந்தைய படங்களில் இருந்த திரைக்கதை வலிமை படத்தில் இல்லை என பலரும் விமர்சனம் செய்தனர். பைக் சேஸிங் காட்சியை தவிர படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை என்கி விமர்சனம் பரவலாக எழுந்தது.

வலிமை படத்திற்கு பின் வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் 2 வேடங்களில் அஜித் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே செய்தி வெளியாகிவிட்டது.

valimai

இந்நிலையில், அஜித் வில்லனாக நடித்தாலும் அவரின் கதாபாத்திரம் சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறதாம். பேட்மேன் மற்றும் மணி ஹீஸ்ட் வெப்சீரியஸில் வருவது போல வில்லன் கதாபாத்திரம் அசத்தலாக இருக்குமாம். மேலும், மிகவும் திறமையாக திட்டமிட்டு வங்கி கொள்ளையில் அவர் ஈடுபடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். இதற்கான கதை, திரைக்கதை அமைக்கும் பணிகளில் வினோத் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்.

இப்படம் மூலம் மீண்டும் ஒரு மங்காத்தா அஜித்தாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.