ajith

சிறுத்தை படம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் சிவா.. அடுத்து அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கினர். அப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

சிவாவின் அணுகுமுறை அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து தனது படங்களை இயக்கும் வாய்ப்பை அஜித் அவருக்கு கொடுத்தார். மேலும், ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தையும் சிவா இயக்கினார். ஆனால், அப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

ajith

வலிமை படத்திற்கு பின் அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது அஜித்தின் 61வது படமாகும். இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். அது அஜித்தின் 62வது திரைப்படமாகும்.

இந்த படங்களுக்கு பின் மீண்டும் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதகவும், அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. இது அஜித்தின் 63வது திரைப்படமாகும்.