anushka

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரின் சம்பளம் ரூ.100 கோடி வரை உயர்ந்துள்ளது. தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அடுத்து விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

 

அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாவதுண்டு. பெரும்பாலும் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களாகும். அல்லது அவரின் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களாக இருக்கும்.

ajith

இந்நிலையில், அவரின் புதிய பட கெட்டப்புடன் மங்காத்தா பட தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தயாநிதி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் அஜித்துடன், அவரின் மனைவி ஷாலினி மற்றும் அவரின் மகள் அனுஷ்காவும் இடம் பெற்றுள்ளார்.

அனுஷ்கா தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாகி விட்டார். இன்னும் சில வருடங்கள் ஆனால் அவர் ஹீரோயின் ஆனாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை போல.

anushka