நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுவது, ரிமோட்டில் இயங்கும் குட்டி விமானத்தை இயக்குவது என பலவற்றிலும் ஆர்வம் உடையவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் அதை செய்ய தவறுவதே இல்லை.
அதேபோல், அவர் நடிக்கும் திரைப்படங்களில் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகளில் டூப் போடாமல் அவரே ஓட்டுவார். சில சமயம் இதில் விபத்தும் ஏற்பட்டு அவருக்கு அடிபடுவதுண்டு. அவரது முதுகில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால், அஜித் மாறவே இல்லை. வலிமை படத்தில் கூட பைக் வீலிங் செய்யும் போது கீழே விழுந்து அவர் பலத்த காயமடைந்தார். ஆனாலும் ஓய்வு கூட எடுக்காமல் அந்த காட்சியில் மீண்டும் நடித்தார்.
இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் எலும்பியல் மருத்துவர் நரேஷ் பத்மநாபன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ‘வலிமை படத்தில் ஒரு காட்சியில் அஜித் கீழே விழுந்ததைத்தான் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
ஆனால், பல முறை அவர் கீழே விழுந்துள்ளார். முதுகில் மட்டும் 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. ஒருமுறை பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நிலைக்கும் சென்றார். ஆனாலும், தொடர்ந்து அவர் ரிஸ்க் எடுத்துதான் வருகிறார். அவர் செய்வதை ரசிகர்கள் செய்து பார்க்க வேண்டாம்’ என அவ்ர் எச்சரிக்கை விடுத்தார்.