வலிமை திரைப்படத்திற்கு பின் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தில் அஜித் வில்லன் மற்றும் ஹீரோ என 2 வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது.
இந்த படத்துக்காக ஒரு புதிய கெட்டப்புக்கு அஜித் மாறியுள்ளார். வெள்ளை நிற தலைமுடி, மீசை, நீளமான முடி என அவரின் சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை அஜித் குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதிலும், அதே கெட்டப்பில்தான் இருக்கிறார் அஜித்.