வலிமை படத்துக்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கவுள்ளது.
இப்படத்தை வேகமாக முடித்து விட்டு அடுத்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இவர் நானும் ரவுடிதான் படத்தை இயக்கியவர். தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவை வைத்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கி வருகிறார்.
அஜித்-விக்னேஷ் சிவன் இணையவுள்ள படம் அஜித்துக்கு 62வது திரைப்படமாகும். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். மேலும், அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது. அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது.