web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

மீண்டும் வில்லனாக களம் இறங்கும் தல.. அஜித் 61 மாஸ் அப்டேட்….

அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. ஒருபக்கம் அஜித்தின் அடுத்த படம் தொடர்பான செய்திகள் கசிய துவங்கியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது.

valimai

இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைக்கும் பணியில் ஹெச்.வினோத் ஈடுபட்டுள்ளார். மேலும், ப்ரீ புரடெக்‌ஷன் பணிகளும் துவங்கியுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் அஜித் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வில்லன் எனில் மெயின் வில்லன் கிடையாது. அவரின் கதாபாத்திரம் வில்லத்தனம் செய்வது போல் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: