ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக அஜித், விஜய், ரஜினி போன்ற பெரிய நடிகர் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் எடிட் செய்யப்படும் முன்பு காட்சிகளை ஒரு வரிசையாக சேர்த்து ஹீரோவுக்கு போட்டு காட்டுவார்கள். அவர் பார்த்து சில மாறுதல்களை கூறுவார். அதன்படி இயக்குனரும் எடிட் செய்வார். எடிட்டிங் முடிந்து, பின்னணி இசை, ஒலி அமைப்பு என அனைத்து வேலையும் முடிந்த பின் மீண்டும் ஹீரோ படம் பார்ப்பார். அவருக்கு திருப்தி எனில், அப்படியே படம் வெளியாகும்.
ஆனால், வலிமை படம் முடிந்து டப்பிங் பணிகளும் முடிந்துவிட்டது. எனவே, ரஃப் காட்சிகளை பார்க்க வினோத் அஜித்தை அழைத்த போது ‘உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்கள் விருப்பப்படி எடிட் பண்ணி படத்தை முடித்து சென்சாருக்கு அனுப்புங்கள். அதன்பின் நான் படம் பார்க்கிறேன்’ என கூறிவிட்டாராம்.
ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தில் வினோத்துடன் அஜித் பணிபுரிந்துள்ளதால் அவரின் பணி மீது அவருக்குள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.