அமராவதி படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஜித். ஆசை, காதல் கோட்டை என சாக்லேட் பாயாக பல படங்களில் நடித்தார். அவரை மாற்றிய பெருமை இயக்குனர் சரணுக்கு உண்டு. அமர்க்களம் படம் மூலம் அஜித்தை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றினார். அதன்பின் பில்லா, மங்காத்தா ஆகிய படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாக மாறினார் அஜித்.

ajith

சமீபத்தில் அவரின் நடிப்பில் வலிமை படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், அடுத்தும் ஹெச் வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்திற்காக டை அடிக்காத நரைத்த முடி மற்றும் நீளமான தாடியில் அஜித் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ajith

இந்நிலையில், திடீரென கேரளாவுக்கு அஜித் விசிட் அடித்துள்ளார். ஆனால், இது பக்தி சுற்றுலா ஆகும். ஆம், குருவாயூர் கோவிலுக்கு சென்று அவர் தரிசனம் செய்துள்ளார்.

ajith

அங்கு சில பேருடன் அவர் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ajith