ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே, அடுத்து எல்லோருக்கும் பிடித்தது போல் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மீண்டும் ஹெச். வினோத்-அஜித் கூட்டணி இணைந்துள்ளது.
இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் ஹோட்டல் முதலாளியாக நடிக்கவுள்ளார் எனவும், இந்தியா முழுவதும் அவரின் ஹோட்டல் கிளைகள் இருக்கும் எனவும், கஷ்டப்பட்டு முன்னேறி வாழ்க்கையில் சாதிக்கும் இளைஞராக அஜித் நடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் முழுக்கதையையும் அஜித்திடம் விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளார். அதில், அரசியல் தொடர்பான
காட்சிகள் இருப்பதைக்கண்டு அதிர்ந்து போன அஜித், விக்னேஷ் சிவனை அழைத்து ‘ என் படத்தில் அரசியல் காட்சிகள் வேண்டாம். மாற்றி விடுங்கள்’ என கட்டளை போட்டாராம். இதைக்கேட்டு அப்செட் ஆகியுள்ளாராம் விக்னேஷ் சிவன்.