rrr

பாகுபலிக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட நடித்திருந்தார். ஆனால், படத்தில் இவருக்கு குறைவான காட்சிகளே இருந்தது.

இதில், அதிருப்தி அடைந்த ஆலியா பட் ராஜமவுலி மீது கோபத்தில் இருப்பதாகவும், டிவிட்டரில் ராஜமவுலி கணக்கை பின் தொடர்வதை அன் ஃபாலோ செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

Alia bhatt

இந்நிலையில், ஆலியா பட் இதுபற்றி இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ளார். அதில், வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார். தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். ஆர்.ஆர்.ஆர். போன்ற திரைப்படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியே. ராஜமவுலி இயக்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் நடித்ததை பெருமையாக உணர்கிறேன்’ என கூறியுள்ளார்.