அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியானது.
இப்படத்திற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழு ஆந்திரா, கேரளா, மும்பை என சென்று புரமோஷன் செய்தனர். இதன் காரணமாக இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எனவே, இப்படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
படம் ரிலீஸ் ஆகி 50 நாட்கள் ஆகியும் நல்ல வசூலை இப்படம் பெற்று வருகிறது. இதுவரை ரூ.350 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. ஹிந்தியில் மட்டும் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அல்லு அர்ஜூனுக்கு எப்படி மேக்கப் போடப்பட்டு அவர் புஷ்பாவாக மாறுகிறார் என்கிற மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.