vikram

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பஹத் பாசில் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு 3 ஜோடிகள் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே, சீரியல் நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில் டிவி நடிகை நந்தினி மற்றும் மகேஸ்வரி என இருவரும் அவருடன் நடித்துள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில், அதாவது படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் பாலிவுட் நடிகர் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் நடத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே இது உண்மையா என தெரிய வரும்.