சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த போது, படப்பிடிப்பு குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. எனவே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினி சென்னை திரும்பினார். எனவே, அண்ணாத்தே படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக செய்தி வெளியானது.
ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பீதி அடைந்த ரஜினி தற்போது படப்பிடிப்பு வேண்டாம் எனவும், இன்னும் 2 வாரங்கள் கழித்து, அதாவது, ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு வைத்துக்கொள்வோம் என படக்குழுவினரிடம் கூறிவிட்டார் என தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.