பொதுவாக தீபாவளி, பொங்கல் என்றாலே தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு தியேட்டரில் ரிலீஸ் ஆகி சில மாதங்களே ஆன புதிய படங்களை ஒளிபரப்புவார்கள்.
இந்த முறை சன் டிவியில் பொங்கலன்று அண்ணாத்த படம் ஒளிபரப்பானது. ஆனால், அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் டி.ஆர்.பியை கூட இந்த படம் தாண்டவில்லை. அவ்வளவு ஏன்? விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் பெற்ற டி.ஆர்.பியை கூட அண்ணாத்த தாண்டவில்லை.
சன் டிவியில் பிச்சைக்காரன் படம் டி.ஆர்.பியில் 17.69 புள்ளிகளும், விஸ்வாசம் படம் 18.14 புள்ளிகளும் பெற்றிருந்த நிலையில், அண்ணாத்த படம் 17.37 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது.
ஆனாலும், 16.96 புள்ளிகள் பெற்ற சர்கார் படத்தையும், 16.76 புள்ளிகளை பெற்ற சீமராஜா படங்களையும் அண்ணாத்த திரைப்படம் முந்தியுள்ளது.