web analytics
Saturday, September 24SOCIAL MEDIA

மீண்டும் துவங்கிய அண்ணாத்த படப்பிடிப்பு – பரபர அப்டேட்

annathe

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த போது, படப்பிடிப்பு குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. எனவே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினி சென்னை திரும்பினார். எனவே, அண்ணாத்தே படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.

annathe

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அண்ணாத்தே படம் இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

rajini

%d bloggers like this: