web analytics
Monday, August 8SOCIAL MEDIA

வெங்கட் பிரபுவின் புதிய படம்… வில்லனாக நடிப்பது யார் தெரியுமா?……

venkat prabu

சென்னை 28, சரோஜா, மங்காத்தா, பிரியாணி, மாநாடு உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு. இவரின் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு படத்தின் வெற்றி வெங்கட் பிரபுவை முன்னணி இயக்குனராக மாற்றியுள்ளது. இப்படம் மூலம் அவரின் சம்பளமும் உயர்ந்துள்ளது.

மாநாடு படத்துக்கு பின் அவரின் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் மன்மத லீலை. இப்படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், அடுத்து தெலுங்கு நடிகர் மற்றும் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இது வெங்கட்பிரபுவின் முதல் நேரடி தெலுங்கு படமாகும். இப்படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே அருண் விஜய் சில தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: