தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் அருண் விஜய். பல படங்களில் நடித்திருந்தாலும் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அப்படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தார். அப்படத்தை கவுதம் மேனன் இயக்கியிருந்தார்.

இப்படத்திற்கு பின் பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்தார். அவர் இரட்டை வேடங்களில் நடித்த தடம் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் மேலும் பிரபலப்படுத்தியது. அப்படத்தின் வெற்றி அவரை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாற்றியது. எனவே, பல படங்களில் நடித்தார். ஹரி இயக்கி முடித்துள்ள யானை படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது.