web analytics
Wednesday, January 19SOCIAL MEDIA

மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு – அதிரும் இணையதளம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டரில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பொங்கல் விருந்தாக இப்படம் வெளியாகிறது எனவும், தள்ளிப்போகிறது எனவும் செய்திகள் மாறி மாறி வெளிவந்தது.

master

இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 600 தியேட்டர்கள் இப்படம் வெளியாகும் எனத்தெரிகிறது.

இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.