atlee

விஜயை வைத்து தெறி,மெர்சல்,பிகில் ஆகிய படங்களை இயக்கிவர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர். அதனால் அவரை போலவே அதிக பட்ஜெட்டுகளில் படங்களை இயக்கி வருகிறார்.

பிகில் படத்திற்கு பின் ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இப்படத்தை ஷாருக்கானின் க்ரீன் சில்லி நிறுவனமே தயாரித்து வருகிறது. இப்படத்தில் நயன்தாராவும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிந்த நிலையில் ,காட்சிகளை பார்த்த ஷாருக்கான்ட் தனக்கு பல காட்சிகளில் திருப்தி இல்லை எனவும், மீண்டும் அந்த காட்சிகளை எடுப்போம் எனவும் கூறிவிட்டாராம்.

atlee

ஏற்கனவே 3 வருடங்களுக்கு மேல் மும்பையில் தங்கி இப்படத்தை இயக்கி வருகிறார். இப்போதும் மேலும் படப்பிடிப்பு நீடித்துக்கொண்டே போனால் எப்போது அடுத்த படத்தை இயக்குவது என அப்செட் ஆகியிருக்கிறாராம் அட்லீ. பாலிவுட் வாய்ப்பு என போனவர் தற்போது கோலிவுட்டுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.