ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் பேச்சுலர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்யா பாரதி நடித்துள்ளார். 2 நண்பர்கள், ஒரு பெண் ஆகிய கதாபாத்திரங்களை சுற்றி இப்படம் நகர்கிறது.

இப்படத்தில் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் தணிக்கை சான்றிதழ் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. எனவே, திரிஷா இல்லனா நயன்தாரா படம் போல் இப்படத்தில் கிளுகிளுப்பான காட்சிகள் இருக்கும் என நினைத்தார்களோ என்னவோ இப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் சென்று பார்த்து வருகின்றனர்.

இதன் காரணமாக இப்படத்திற்கு நல்ல ஒப்பனிங் கிடைத்துள்ளது. இப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி நிறுனம் சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ளார். இப்படத்தை சதீஷ் செல்வகுமார் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் பெற்றுள்ளது.