நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல்வேறு முகங்களை கொண்டவர் பிரபுதேவா. தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள ‘பகீரா’ என்கிற படத்தில் ஏராளமான வேடங்களில் பெண்களை ஏமாற்றி அவர்களை கொலை செய்யும் வேடத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் ரம்யா நம்பீசன், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், ஜனனி ஐயர், சாக்ஷி அகர்வால் மற்றும் சோனியா அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். தமிழிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
இப்படத்தை ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.