prashanth

கன்னட திரைப்படங்களை சினிமா ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில் கேஜிஎப் திரைப்படம் சூறாவளி போல வந்து அதை மாற்றியது. அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல். கர்நாடகாவில் உள்ள தங்க சுரங்கம் செயல்படும் இடத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்தார்.

kgf

தற்போது அதன் 2ம் பாகம் சமீபத்தில் வெளியாகி உலகமெங்கும் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. இப்படம் ரூ.800 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து கேஜிஎப் மூன்றாம் பாகத்திற்கும் இப்படக்குழு தயாராகி விட்டது. அடுத்து அதே கேஜிஎப்-ஐ மையமாக வைத்து சலார் என்கிற படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார். இதில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில், பிரசாந்த் நீல் எப்போதும் மது போதையில் கதை எழுதுவார். விடிந்த பின் சரியாக இருக்கிறதா எனப்பார்த்துவிட்டு அடுத்தக்கட்ட வேலையை பார்ப்பார் என நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு யுடியூபில் தெரிவித்துள்ளார்.