சூர்யாவை வைத்து நந்தா மற்றும் பிதாமகன் என இரண்டு திரைப்படங்களை பாலா இயக்கினார். அதன்பின், பல வருடங்கள் இருவரும் இணையவில்லை. ஒருபக்கம் சூர்யாவும் வளர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
இந்நிலையில், பாலாவும், சூர்யாவும் பல வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்தனர். இப்படத்தை சூர்யாவே தயாரித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கன்னியாகுமாரியில் துவங்கியது.
இந்த படப்பிடிப்பில் சில காரணங்களால் பாலாவுக்கும்,சூர்யாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே, படப்பிடிப்பிலிருந்து வெளியேறி சென்னை வந்துவிட்டார். அதன்பின் மீண்டும் தற்போது வரை படப்பிடிப்புகள் துவங்கப்படவே இல்லை.
ஒருபக்கம், இந்தபடம் தொடர்வே வாய்ப்பில்லை என அப்படக்குழுவினர் சிலர் வெளியே தகவலை கசிய விட்டுள்ளனர்.