web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் கலக்கும் பீஸ்ட்…..

beast

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. விஜய் ரசிகர்கள் பல நாட்களுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து வைத்துள்ளனர்.

ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும்,காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர்.

beast

ஆனாலும், இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. முதல் நாள் வசூலாக இப்படம் ரூ 38 கோடியை இப்படம் தமிழகத்தில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதோடு, உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் இரண்டு நாளில் 100 கோடியை வசூல் செய்ததாகவும் செய்திகள் பரவி வருகிறது.

%d bloggers like this: