டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.டாக்டர் படம் ஹிட் அடித்த நிலையில் நெல்சனோடு விஜய் இணைந்திருப்பதால் இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் விஜய் நடிக்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. எனவே, நெல்சன் அவரை கட்டியணைத்து விடை கொடுத்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் வைரலானது.இப்படத்திற்கு பின் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.
ஒருபக்கம் பீஸ்ட் படம் தொடர்பான எந்த அப்டேட்டையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை கொடுக்கவில்லை. இப்படம் வருகிற கோடை விடுமுறையில் அதாவது ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட ரிலீஸுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்படத்தின் ஒரு பாடல் கூட வெளியாகவில்லை.
ஏற்கனவே, பீஸ்ட படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு அன்று வெளியாகிறது என ஒரு செய்தி வெளியானது. எனவே, விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அப்படி எதும் வெளியாகததால் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், ஜனவரி 26ம் தேதி இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என செய்திகள் வெளியாகி வருகிறது. இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் அந்த தகவலை இன்னும் உறுதி செய்யவில்லை. எனவே, இது உண்மையில் நடக்க வாய்ப்பில்லை என விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.