beast

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளர். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்திற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. எனவே, விஜய் ரசிகர்கள் ஆர்வமுடம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்திற்கு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது. முதல் ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

beast

இந்நிலையில், முன் பதிவு டிக்கெட்டுகளின் அடிப்படையில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூலை சிலர் கணித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ரூ. 37 கோடி, கேரளாவில் 7.6 கோடி, ஆந்திரா / தெலுங்கானா – 10 கோடி, கர்நாடகா – 8 கோடிகள், மற்ற மாநிலங்கள் – 4 கோடிகள், ஓவர்சீஸ் – 32 கோடிகள் வசூல் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது மொத்தமாக முதல் நால் வசூல் 98.5 கோடிகள், அதாவது ஏறக்குறைய 100 கோடிகள் வரை பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.