மாஸ்டர் படத்திற்கு பின் அஜித் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டனர்.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான ‘ஜாலியோ ஜிம்க்கானா’ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடலை விஜயே பாடியுள்ளார். இப்பாடலை கார்த்திக் என்பவர் எழுதியுள்ளார்.
இந்த பாடலு விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.