விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் மலையாள நடிகை அபர்ணாதாஸும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான புகைப்படம் மூலமே அவர் இப்படத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்தது. தற்போது அவர் விஜயின் தங்கையாக நடிப்பது தெரியவந்துள்ளது. இடைவேளைக்கு பின் இவருக்கும் – விஜய்க்குமான செண்டிமெண்ட் காட்சிகள் நிறைய வருகிறதாம். படத்தின் கதையே அவரை சுற்றி நகர்வதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகி அதில் இடம் பெற்றிருந்த அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் பெரிதும் கிண்டலடிக்கப்பட்டது. அதேபோல், வலிமை படத்திலும் செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களை சோதித்தது.
ஆனால், பீஸ்ட் படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது படம் பார்த்தால்தான் தெரிய வரும்.