beast

விஜய் ரசிகர்கள் தாறுமாறாக எதிர்பார்த்த பீஸ்ட் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்தை பார்த்து வருகின்றனர். அதேபோல், பொதுவான சினிமா ரசிகர்கள் பலரும் இப்படத்தை இன்று காலை முதல் காட்சியே பார்த்து ரசித்தனர்.

beast

இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே பலரும் கூறி வருகின்றனர். விஜய் படத்தை தாங்கி பிடித்தாலும் கதை மற்றும் திரைக்கதையில் நெல்சன் கோட்டை விட்டைவிட்டார். முதல் பாதி சுமாராக இருக்கிறது. இரண்டாம் பாதி சோதிக்கிறது என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

twitt

கிங்ஸ்லி, யோகிபாபு என இருந்தும் பெரிய காமெடி காட்சிகள் இல்லை எனவும், ஆக்‌ஷன் படமா, காமெடி படமா என நெல்சன் குழம்பிவிட்டதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.

twitt

படத்தில் பின்னணி இசை, பாடல் காட்சிகள், சில சண்டை காட்சிகள் நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.சிலரோ, விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும், ஒரு முறை பார்க்கலாம் என்கிற ரீதியில் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

ஒருபக்கம், இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும்,வீடியோக்களும் வலம் வருகிறது.