தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பின் வசூல் மன்னனாக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களாக அவரின் திரைப்படங்கள் ரஜினி படங்களையும் தாண்டி வசூல் பெற்று வருகிறது.
விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை வெளியாகவுள்ளது. சுமார் 800 தியேட்டர்களில் இப்படம் நாளை திரையிடப்படவுள்ளது. 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஏற்கனவே பல நகரங்களிலும் அசத்தலான முன் பதிவை இப்படம் பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் நாளை பீஸ்ட் திரைப்படம் ரூ.40 கோடி வசூலை பெறும் என சினிமா பிரமுகர் ஒருவர் கணித்துள்ளார். இதுவரை முதல் நாள் வசூலில் சர்கார் திரைப்படமே ரூ.34 கோடி வசூலித்து முதல் இடத்தில் இருக்கிறது. பீஸ்ட் திரைப்படம் அந்த சாதனையை உடைக்கும் என பலராலும் நம்பப்படுகிறது.