beast

மாஸ்டர் படத்துக்கு பின் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மாலை தீவிரவாதிகள் கைப்பற்றி அங்குள்ள மக்களை பணயக்கைதிகளாக வைத்துள்ளனர். அந்த மாலில் இருக்கும் விஜய் தீவிரவாதிகளை துவம்சம் செய்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை ஆகும்.

எனவே, விஜய் ரசிகர்களுக்கு பக்கா ஆக்‌ஷன் விருந்து காத்திருக்கிறது என்பது டிரெய்லர் வீடியோவை பார்த்தாலே தெரிகிறது.