beast

விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படம் வருகிற 13ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. பொதுவாக விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்கள் படங்கள் வெளியானால் நள்ளிரவு காட்சி ஒன்றை திரையிடுவார்கள். நள்ளிரவு 1 மணி அல்லது அதிகாலை 4 மணிக்கு அந்த காட்சி ஒளிபரப்பாகும். பீஸ்ட் படத்திற்கும் 1 மணிக்கு ஒரு காட்சியை சென்னை உள்ளிட்ட சில திரையரங்குகளில் ஒளிபரப்ப உள்ளனர்.

இந்நிலையில், இந்த காட்சிக்கு ரூ.2 ஆயிரம் என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். பொதுவாக அரசு நிர்ணயிக்கும் விலையில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இதையெல்லாம் திரையரங்க உரிமையாளர்கள் பின்பற்றுவதில்லை. மிக அதிக விலை கொடுத்து பெரிய படங்களை வாங்குவதால் அவர்களும் வேறு வழியின்றி அதிக விலைக்கு அவர் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக தியேட்டர்கள் அதிபர்கள் தரப்பு கூறுகிறது.

2 ஆயிரம் என்ன? 5 ஆயிரம் என்றாலும் விஜயின் தீவிர ரசிகர்கள் அந்த விலைக்கு வாங்கி நள்ளிரவு காட்சியை பார்க்க தயாராகத்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.