தமிழகத்தில் பிக்பாஸ் 5வது சீசன் முடிந்துவிட்டது. ஹிந்தியில் 10 சீசனை தாண்டி விட்டது. கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 5வது சீசனின் இறுதிப்போட்டியின் வெற்றியாளர் நேற்று அறிவிக்கப்பட்டது. வெற்றியாளர் பட்டத்தை ராஜு தட்டி சென்றார். 2வது வின்னராக விஜய் டிவி விஜே பிரியங்கா பெற்றார்.

தற்போது, ஓடிடி தளத்தில் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில், ஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய ஓவியா, தர்ஷன், வனிதா, காயத்ரி ரகுராம், ஜூலி என பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே நடத்தவுள்ளார். மேலும்,விஜய் டிவியின் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆப்பில் நீங்கள் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியும் என்பதுதான் கூடுதல் சிறப்பு..இந்த தகவலை கமல்ஹாசன் நேற்று இறுதி நாளன்று வெளியிட்டார்.

இந்நிலையில், இது தொடர்பான புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு ‘தொலைச்ச இடத்துல தான தேட முடியும்.. தோத்த இடத்துல தான ஜெயிக்க முடியும்.. This is Bigg Boss Ultimate.. விரைவில்.. நம்ம டிஸ்னி ஹாட் ஸ்டாரில் மட்டும்’என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.