valimai

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகமே இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தது. ஏனெனில், வலிமை அப்டேட்…வலிமை அப்டேட்… என பில்டப் செய்து எதிர்பார்ப்பை எகிற வைத்தனர்.

இப்படம் கடந்த மாதம் 24ம் தேதி வெளியானது. இப்படம் வெளியான முதலே நாளே இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது. உலக அளவில் முதல் நாள் வசூல் ரூ.36.17 கோடி என தகவல் வெளியானது.

 

2வது நாள் வசூல் 24.62 கோடி எனவும், 3வது நாள் 20.46 கோடி எனவும், 4வது நாள் 27.83 கோடி எனவும், 5வது நாள் 8.45 கோடி எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, படம் வெளியாகி 6 நாட்களில் 117.53 கோடி வசூல் செய்துள்ளதாக டிராக்கர்ஸ் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

அதன்பின் இப்படம் ரூ.200 கோடி வசூல் செய்துவிட்டது, 250 கோடி வசூல் செய்துவிட்டது என்றெல்லாம் டிராக்கர்ஸ்கள் பதிவிட்டனர். ஆனால், வலிமை படம் எவ்வளவு வசூல் செய்தது என போனிகபூர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒருபக்கம், இப்படம் வினியோகஸ்தர்களுக்கு பல கோடிகள் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளார்.