web analytics
Saturday, August 6SOCIAL MEDIA

ரஜினியுடன் இணைவது உண்மையா?… போனிகபூர் விளக்கம்…

boney

அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் ரஜினி யாரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நெல்சன் திலீப் குமார் என்பது உறுதியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன். தற்போது விஜயை வைத்து பீஸ்ட் படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார்.

இப்படத்திற்கு பின் கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜாவின் இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால், இந்த தகவலை போனிகபூர் மறுத்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் விளக்கமளித்துள்ள போனிகபூர் ‘ரஜினி எனது பல வருட நண்பர்கள். நாங்கள் அடிக்கடி சந்தித்து நிறைய விஷயங்களை பேசுவோம். நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்தால் அதை முதலில் அறிவிப்பது நானாகத்தான் இருப்பேன். வதந்திகளை நம்ப வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார்.

twitt

%d bloggers like this: