அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். ஆனால், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி வரை தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

valimai

ஒருவேளை 10ம் தேதிக்கு பின்பும் இந்த கட்டுப்பாடு தொடர்ந்தால் வலிமை படத்தின் வசூலை இது கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, திட்டமிட்டபடி வலிமை ரிலீஸ் ஆகுமா என்பதே சந்தேகம் நீடித்து வந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ரசிகர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

valimai