nayan

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்திருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா நடிகைகளில் ரூஇ.6 கோடி முதல் 10 கோடி வர்ரை சம்பளம் பெறும் நடிகை இவர்.

நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது அப்பட இயக்குனர் விக்னேஷ் ஷிவனை காதலிக்க துவங்கினார். தற்போது வரை இந்த காதல் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் ரவுடி பேபி பிக்சர்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி திரைப்படங்களை தயாரிப்பது, வினியோகம் செய்வது என பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.

nayan

வினோத்தின் இயக்கத்திற்கு அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தையும் இந்நிறுவனமே தயாரிக்கவுள்ளது. லைக்கா நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது.

இந்நிலையில், ரவுடிகளை ஊக்குவிக்கும் வகையில் தங்களின் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைக்கப்பட்டிருப்பதால், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.