web analytics
Thursday, December 9SOCIAL MEDIA
Shadow

News

மாநாடு படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அந்த நடிகர்தான்.. வெங்கட்பிரபு கூறிய ரகசியம்..

மாநாடு படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அந்த நடிகர்தான்.. வெங்கட்பிரபு கூறிய ரகசியம்..

News, Tamil News
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் என பலரும் நடித்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் மாநாடு. ஒரு டைம் லூப் திரில்லராக இப்படத்தை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார் வெங்கட்பிரபு. பல வருடங்களுக்கு பின் இப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக மாநாடு அமைந்துள்ளது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தில் மெயின் வில்லனாக நடித்தவர் ஒய்.ஜி.மகேந்திரன். இவரின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். அதே நேரம் முதலில் அந்த வேடத்தில் நடிக்க விருந்தது மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்தானாம். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக ஒய்.ஜி.மகேந்திரனை நடிக்க வைத்துள்ளனர். ...
கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் திரைப்படம்.. ஜெய்பீம் படம் செய்த சாதனை…

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் திரைப்படம்.. ஜெய்பீம் படம் செய்த சாதனை…

News, Tamil News
சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை பத்திரிக்கையாளர் ஞானவேல் இயக்கியிருந்தார். இருளர் மற்றும் குறவர் இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவருக்கு காவல்துறையால் இழைக்கப்பட்ட அநீதிக்கு வழக்கறிஞர் சூர்யா நியாயம் பெற்று தருவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இது உண்மை கதையாகும். இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. அதேநேரம் பல சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படத்தில் இடம் பெற்ற ஒரு காலண்டர் காட்சி வன்னியர் சாதியை குறிப்பதாக கூறி அந்த சாதியை சேர்ந்த சிலர் போர்க்கொடி தூக்கினர். ஆனால், ஜெய்பீம் படத்திற்கு கிடைத்த ஆதரவு அந்த பிரச்சனைகளை முடக்கியது. தற்போது 2021ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ படம் என்கிற பெருமை ஜெய்பீம் திரைப்படம் தட்டி சென்றுள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ...
பவானி ரெட்டியின் செம க்யூட் புகைப்படங்கள்.. செம வைரல்…

பவானி ரெட்டியின் செம க்யூட் புகைப்படங்கள்.. செம வைரல்…

Gallery, News, Tamil News
தெலுங்கில் சில சீரியல்களில் நடித்தவர் பவானி ரெட்டி.. தமிழில் சின்ன தம்பி, ரெட்டை வால் குருவி ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை – நடிகர் அஸ்வின் விளக்கம்..

யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை – நடிகர் அஸ்வின் விளக்கம்..

News, Tamil News
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஸ்வின். இவர் என்ன சொல்லப்போகிறாய் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் குக் வித் கோமாளி புகழும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அஸ்வின் குமார் ‘ எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. கதை கேட்கும்போது எனக்கு பிடிக்கவில்லை எனில் தூங்கி விடுவேன். இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி விட்டேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை இந்த படத்தின் கதைதான்’ என பேசினார். இது பலத்த எதிர்ப்புக்கு உள்ளானது. உதவி இயக்குனர்கள் பலரும் அஸ்வினின் பேச்சை கிண்டலடித்தனர். ஒரு படம் கூட நடித்து இன்னும் வெளியாகவில்லை. அதற்குள்ள இவ்வளவு திமிறா? என அவர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும், பல மீம்ஸ்களும் வலம் வந்தது. இந்நிலையில், இதுபற்றி விள...
சில மணி நேரங்களில் 15 மில்லியன் வியூஸ் – புஷ்பா டிரெய்லர் செய்த சாதனை…

சில மணி நேரங்களில் 15 மில்லியன் வியூஸ் – புஷ்பா டிரெய்லர் செய்த சாதனை…

News, Tamil News
தெலுங்கில் பல ஹிட் படங்களை இயக்கியவர் சுகுமார். இவரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் செம்மரத்தை கடத்தும் கும்பலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 2 பாகங்களாக இப்படம் உருவாகி வரும் நிலையில், முதல் பாகம் வருகிற 17ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், டிரெய்லர் வீடியோ நேற்று இரவு வெளியானது. அனைத்து மொழிகளிலும் இந்த டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மட்டும் இந்த டிரெய்லரை சுமார் 15 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள...
விரைவில் புதிய சீரியலில் கேப்ரியல்லா…ரசிகர்கள் அதிர்ச்சி..

விரைவில் புதிய சீரியலில் கேப்ரியல்லா…ரசிகர்கள் அதிர்ச்சி..

News, Tamil News
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் கேப்ரியல்லா. சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் உள்ளவர். இவரை பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது விஜய் டிவி. பிக்பாஸ் வீட்டில் நன்றாக விளையாடி ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருந்தது. ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது சின்னத்திரையில் நடிக்கவுள்ளர். ஈரமான ரோஜாவே சீசன் 2-வில் கேப்ரியல்லா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஈரமான ரோஜாவே சீரியல் விஜய் டிவியில் வெளியாகி வெற்றியை பெற்ற ஒரு சீரியல் ஆகும். எனவே, தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. இதில்தான் கேப்ரியல்லா நடிக்கவுள்ளார்....
மீண்டும் துவங்கும் துப்பறிவாளன்2 படப்பிடிப்பு – விஷால் கொடுத்த அப்டேட்

மீண்டும் துவங்கும் துப்பறிவாளன்2 படப்பிடிப்பு – விஷால் கொடுத்த அப்டேட்

News, Tamil News
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் துப்பறிவாளன். இப்படத்தில் அசத்தலான வில்லனாக நடிகர் வினய் நடித்திருந்தார். மேலும், பாக்கியராஜ், ஆண்ட்ரியா, பிரசன்னா என பலரும் நடித்திருந்தனர். 3 வருடங்களுக்கு முன்பு இப்படத்தின் 2ம் பாகம் துவங்கப்பட்டது. விஷால் தயாரிக்க மிஷ்கின் இயக்கினார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. சில காரணங்களால் மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட அப்படத்திலிருந்து விலகினார் மிஷ்கின்.எனவே, நானே இப்படத்தை இயக்குவேன் என கூறியிருந்தார் விஷால். இந்நிலையில், 2022 ஏப்ரல் மாதம் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என விஷால் டிவிட்டரில் அறிவித்துள்ளார். ...
பேச்சுலர் நடிகையின் ஹாட் போட்டோஷூட் – வைரல் புகைப்படங்கள்..

பேச்சுலர் நடிகையின் ஹாட் போட்டோஷூட் – வைரல் புகைப்படங்கள்..

Gallery, News, Tamil News
ஜி.வி.பிரகாஷ் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் பேச்சுலர். இப்படத்தில் திவ்யா பாரதி நடித்துள்ளார். இவர் சமீபத்தில் கவர்ச்சியான உடையுடன் ஒரு போட்டோஷூட் நடத்தினார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாஸ் ஒப்பனிங்.. மகிழ்ச்சியில் ‘பேச்சுலர்’படக்குழு…..

மாஸ் ஒப்பனிங்.. மகிழ்ச்சியில் ‘பேச்சுலர்’படக்குழு…..

News, Tamil News
ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் பேச்சுலர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்யா பாரதி நடித்துள்ளார். 2 நண்பர்கள், ஒரு பெண் ஆகிய கதாபாத்திரங்களை சுற்றி இப்படம் நகர்கிறது. இப்படத்தில் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் தணிக்கை சான்றிதழ் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. எனவே, திரிஷா இல்லனா நயன்தாரா படம் போல் இப்படத்தில் கிளுகிளுப்பான காட்சிகள் இருக்கும் என நினைத்தார்களோ என்னவோ இப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் சென்று பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக இப்படத்திற்கு நல்ல ஒப்பனிங் கிடைத்துள்ளது. இப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி நிறுனம் சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ளார். இப்படத்தை சதீஷ் செல்வகுமார் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் பெற்றுள்ளது....
விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பட டீசர் வீடியோ…

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பட டீசர் வீடியோ…

News, Tamil News, Teasers, Videos
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். இப்படம் 2 வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்டது. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தில், விஜய்சேதுபதியின் மனைவியாக அவருடன் பல படங்களில் நடித்தவர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவோடு இணைந்து இசைஞானி இளையராஜாவும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் தயாராகி சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளி சென்றது. தற்போது விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=wJLDZMCeGyA&feature=youtu.be...
மிரட்டலான கவர்ச்சியில் ஜான்வி கபூர்… சூடேற்றும் புகைப்படங்கள்…

மிரட்டலான கவர்ச்சியில் ஜான்வி கபூர்… சூடேற்றும் புகைப்படங்கள்…

Gallery, News, Tamil News
தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவரின் கவர்ச்சியான சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
படம் இயக்கி சாதித்த புளூசட்ட மாறன் – பலரும் பாராட்டும் ‘ஆண்டி இண்டியன்’…

படம் இயக்கி சாதித்த புளூசட்ட மாறன் – பலரும் பாராட்டும் ‘ஆண்டி இண்டியன்’…

News, Tamil News
புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்கிறேன் என கடுமையாக கிண்டலடித்து வீடியோ வெளியிட்டு வருபவர் புளூசட்ட மாறன். யூடியூப்பில் தமிழ் டாக்கீஸ் என்கிற சேனயில் இவரின் வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம். திரைப்படங்களை கடுமையாக கிண்டலடித்து விமர்சனம் செய்வதால் திரைத்துறையின் கோபத்திற்கு ஆளானார் மாறன். முடிந்தால் நீ ஒரு படத்தை எடுத்து காட்டு என இயக்குனர்கள் பலரும் இவரிடம் சவால் விட தற்போது ஆண்ட்டி இண்டியன் என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இப்படம் வருகிற 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சமீபத்தில் இயக்குனர்கள் பலருக்கும் திரையிட்டு காட்டியுள்ளார் மாறன். படம் பார்த்த பாரதிராஜா, சேரன், பாக்கியராஜ் ,சீமான், விக்ரம் என பலரும் இப்படத்தை பாராட்டி பேசியுள்ளனர். இது ஆண்டி இண்டியன் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது....

நடிகை ஸ்ரதா தாஸ் ஹாட் போட்டோஷூட் – வைரல் புகைப்படங்கள்

Gallery, News, Tamil News
மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் ஷ்ரதா தாஸ். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது. ...
அந்த இயக்குனர் படத்தில் ஹீரோவாக செல்வராகவன் – புது பட அப்டேட்

அந்த இயக்குனர் படத்தில் ஹீரோவாக செல்வராகவன் – புது பட அப்டேட்

News, Tamil News
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே என பல படங்களை இயக்கியவர் செல்வராகவன். சமீப காலமாக அவர் நடிக்க துவங்கியுள்ளார். முதன் முதலாக சாணி காயிதம் என்கிற படத்தில் கீர்த்தி சுரேஷும் இவரும் நடித்து முடித்துள்ளனர். அதன்பின் பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய வில்லனாக அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய மோகன் இயக்கும் அடுத்த படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்....
பொன்னியின் செல்வனில் அசத்தலாக நடித்த திரிஷா… வியக்கும் படக்குழு…

பொன்னியின் செல்வனில் அசத்தலாக நடித்த திரிஷா… வியக்கும் படக்குழு…

News
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் உருவாக்கி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா அர்ஜூன் என பலரும் நடித்துள்ளனர்.   இப்படத்தில் திரிஷா குந்தவி என்கிற வேடத்தில் நடித்துள்ளார். தைரியமான சோழ நாட்டு இளவரசியாக அவர் கலக்கி உள்ளாராம். இப்படத்தில் அவர் குதிரையில் செல்லும் பல காட்சிகள் வருகிறது. எனவே, இதற்காகவே சில நாட்கள் அவர் குதிரை ஏறும் பயிற்சியை பெற்று பின் இப்படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகளை பார்த்த படக்குழு திரிஷாவின் சினிமா வாழ்வில் இப்படம் அவரின் சிறப்பான படமாக இருக்கும் என உறுதியாக கூறுகிறார்கள். இப்படத்திற்கு திரிஷா அவரே சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார் என்பது கூடுதல் செய்தி....