The makers of Dhanush-starrer Vaathi released the teaser of the film Thursday. Directed by Venky Atluri, the movie also stars Samyuktha Menon in the female lead role. GV Prakash Kumar has composed the music for this movie.
https://www.youtube.com/watch?v=q3iwZTW_hTM&list=PLFjXAdhGiMYJoTj_0pd6NB6eoL4aEzTzq&index=3
கடந்த சில வருடங்களாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஆனால், இப்போது வரை அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. நயன்தாராவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
ஒருபக்கம், நயனும், விக்கியும் தொடர்ந்து கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தனர். மேலும், இவர்களின் திருமணம் அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கடல் உணவு உணவகத்தில் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் உணவு ஊட்டி விடும் வீடியோவை விக்னேஷ் சிவனே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
View this post on...
ஹாலிவுட்டில் டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஜேம்ஸ் கேம்ரூன்.இவர் இயக்கத்தில் வெளிவந்த அவதார் திரைப்படம் உலகமெங்கும் வசூலை வாரி குவித்தது. இப்படம் 2009ம் ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் 13 வருடங்கள் கழித்து 2022 டிசம்பர் மாதம் டிசம்பர் 16ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இதுதான் அவதார் 2- டிரெய்லர் என சில வீடியோக்கள் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
https://www.youtube.com/watch?v=a8Gx8wiNbs8
...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமாண்டிக் காமெடி வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. நானும் ரவுடிதான் படத்திற்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
ஒருவர் 2 பெண்களை காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சனையை நகைச்சுவையாக இப்படம் சொல்லியிருக்கிறது என்பது படத்தின் டீசரை பார்த்த போதே ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. எனவே, ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. எனவே, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமுடன் பார்த்தனர்.
இப்படம் கடந்த 28ம் தேதி வெளியானது. முதல் நாளில் தமிழகத்தில் இப்படம் ரூ.5.20 கோடி வசூல் செய்தது. முதல் நாள் சென்னையில் மட்டும் இப்படம் 66 லட்சம் வசூல் செய்ததாக கூறப்பட்டது. 29ம் தேதி ரூ.5.10 கோடியும், 30ம் தேதி ரூ.6.10 கோ...
தமிழ் சினிமாவில் வடிவேலு - பிரபுதேவா காம்பினேஷனில் பல காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. ராசய்யா, காதலன், மிஸ்டர் ரோமியோ என பல படங்களில் பிரபுதேவா-வடிவேலு இணைந்து நடித்துள்ளனர். அதில் முக்கியமானது மனதை திருடிவிட்டாய் படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள்தான். ‘ஒய் பிளட் சேம் பிளட்’ உள்ளிட்ட வசனங்கள் மிகவும் பிரபலமானது.
மனம் கொத்தி பறவை திரைப்படம் வெளியாகி 21 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படத்தில் வடிவேல் பாடும் ‘சிங் இன் த ரைன்’ பாடலை சமீபத்தில் பிரபுதேவாவும், வடிவேலும் நேரில் சந்தித்த போது வடிவேல் ஃபர்மான்சுடன் பாடிக்காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/Vadiveluhere/status/1515618870786023428...
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் அதிபர் லெஜெண்ட் சரவணா துவக்கத்தில் விளம்பர படங்களில் மட்டும் நடித்து வந்தார். திடீரென அவருக்கு சினிமா ஆசை ஏற்பட தி லெஜெண்ட் என்கிற படத்தில் நடிக்க துவங்கினார்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை விளம்பர படங்களை இயக்கும் இரட்டையர்கள் ஜே.டி. ஜெர்ரி இயக்கியுள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற மொசலோ மொசலு பாடல் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=1LcUvz7kbNM...
Here is the Teaser of the most epic investigation thriller made in Malayalam starring Mammootty in lead CBI 5: The Brain. Produced by Swargachitra Appachan, this film is directed by K.Madhu and written by S.N.Swamy. The music of this film is by Jakes Bejoy.
https://youtu.be/78gkbAeqnkg
மாஸ்டர் படத்துக்கு பின் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மாலை தீவிரவாதிகள் கைப்பற்றி அங்குள்ள மக்களை பணயக்கைதிகளாக வைத்துள்ளனர். அந்த மாலில் இருக்கும் விஜய் தீவிரவாதிகளை துவம்சம் செய்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை ஆகும்.
எனவே, விஜய் ரசிகர்களுக்கு பக்கா ஆக்ஷன் விருந்து காத்திருக்கிறது என்பது டிரெய்லர் வீடியோவை பார்த்தாலே தெரிகிறது.
https://www.youtube.com/watch?v=0E1kVRRi6lk...
நடிகர் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் தமிழ மற்றும் பல தெலுங்கு படங்களில் நடித்தார். இவர் பாடகியும் கூட. நடிப்பு, மாடல், இசை, பயணம், கலை ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்.
இவர் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்தார். அதன்பின் அவர்களுக்கு இடையே பிரேக்கப் ஆனது.தற்போது மும்பையில் தங்கியிருக்கும் ஸ்ருதிஹாசன் தற்போது அசாமை சேர்ந்த சாந்தனு ஹசாரிக்கா என்பவரோடு லிவ்விங் டூ கெதரில் இருக்கிறார்.
இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வபோது இருவரும் பகிர்ந்து வருகின்றனர். விரைவில் இவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் சாந்தனு தனது பிறந்தநாளை ஸ்ருதிஹாசனுடன் கொண்டாடினார். அப்போது அவர் ஸ்ருதிஹாசனுக்கு லிப்லாக் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https:/...
இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இண்டிபெண்டன்ஸ் டே, அலாவுதின் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் வில் ஸ்மித். இவர் கிங் ரிச்சர்ட் எனும் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். இது இவரின் முதல் ஆஸ்கர் விருது ஆகும்.
இந்நிலையில், ஹாலிவுட் காமெடி நடிகர் கிரிஸ் ராக் மேடையில் எல்லோரையும் சிரிக்க வைக்க பேசிக்கொண்டிருந்த போது வில்ஸ் ஸ்மித்தின் மனைவியின் மொட்டை தலை பற்றி கிண்டலடித்தார். ஒரு நோயால் அவரின் தலை முடி கொட்டிய நிலையில் அவர் இப்படி கிண்டலடித்தது வில் ஸ்மித்துக்கு பிடிக்கவில்லை.
எனவே, மேடையில் ஏறி அந்த நடிகருக்கு ஒரு அறை விட்டார். மேலும், தனது இருக்கையில் வந்து அமர்ந்து ‘என் மனைவியி...
மாஸ்டர் படத்திற்கு பின் அஜித் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டனர்.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான ‘ஜாலியோ ஜிம்க்கானா’ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடலை விஜயே பாடியுள்ளார். இப்பாடலை கார்த்திக் என்பவர் எழுதியுள்ளார்.
இந்த பாடலு விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
https://www.youtube.com/watch?v=jmwU1iAC-IE...
நடிகர் தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளன. ஆனால், திருமணம் ஆகி 17 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.
இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தவறான முடிவு எனவும், இருவரும் மீண்டும் இணையவேண்டும் எனவும் பலரும் கோரிக்க வைத்தனர். ஆனால், இருவரும் தங்கள் வழியில் நடக்க துவங்கிவிட்டனர்.
தனுஷ் ஒருபக்கம் படங்களில் நடிக்க, ஐஸ்வர்யா ஒரு ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இதற்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். இந்த வீடியோ இன்று யுடியூப்பில் வெளியானது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்து ‘எனது தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.
https://twit...