கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற ‘செல்லம்மா’ பாடல் சில மாதங்களுக்கு முன்பு யுடியூப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த பாடல் யுடியூப்பில் இதுவரை 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களை பெற்றுள்ளது. இது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் வீடியோ இதுவரை 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.