நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளர். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இப்படத்திற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. எனவே, விஜய் ரசிகர்கள் ஆர்வமுடம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்திற்கு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது. முதல் ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருப்பூர் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பீஸ்ட் படம் பார்ப்பதற்காக 13ம் தேதி விடுப்பு கேட்டு நிறைய பேர் விண்ணப்பித்துள்ளனர். இதைப் புரிந்து கொண்ட நிறுவனம் 13ம் தேதிக்கு விடுமுறை அறிவித்ததோடு, டிக்கெட்டும் ரிசர்வ் செய்து கொடுத்திருக்கிறது.