web analytics
Saturday, August 6SOCIAL MEDIA

அயலான் படத்திற்கு திடீர் தடை – சிவகார்த்திகேயன் அதிர்ச்சி

நேற்று இன்று நாளை திரைப்படத்தை இயக்கிய ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அயலான். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். இது ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்க கோரி ஜேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 24 ஏ.எம் நிறுவனம் தங்களிடம் பெற்ற ரூ. 5 கோடி கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.6 கோடி 92 லட்சத்தை திருப்பி தராமல் அயலான் படத்தை வெளியிடவோ, வினியோகம் செய்யவோ கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து அயலான் படத்தை ஜனவரி 3ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

%d bloggers like this: