போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இப்போதும் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் தனது படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி பயன்படுத்தியதாக மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் இயக்குனர் ஹெச்.வினோத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.