danush

நடிகர் தனுஷ் ஏற்கனவே தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்திற்கு வாத்தி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கவுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் ஒரு பேன் இண்டியா திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை ராக்கி மற்றும் சாணி காயிதம் படங்களை இயக்கியுள்ள அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு கேப்டன் மில்லர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1930ல் நடக்கும் ஆக்‌ஷன் அட்வென்சர் படமாக இப்படம் உருவாகவுள்ளது.