கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கடந்த வருடமே வெளியாகவேண்டிய திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி மற்றும் ரகிட ரகிட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.ஆனால், இப்படம் நேரிடையாக நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டாம். தியேட்டரில் வெளியிடுங்கள் என தனுஷ் ரசிகர்கள் போஸ்டர்களை ஓட்டி வருகின்றனர். இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

danush