ரஜினியின் மகளும், தனது மனைவியுமான ஐஸ்வர்யாவை பிரிவதாக சமீபத்தில் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் நடிகர் தனுஷ். இது ரசிகர்கள், திரையுலகினர் என பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது ரஜினிக்கும் பெரிய அப்செட்டை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்களும் தனுஷ் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொதுவாக பெண்களுக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்தாலும் சரி, சொந்த வாழ்வில் மனைவியை பிரிந்தாலும் சரி அந்த நடிகரின் திரைப்படங்களை பார்ப்பதை பெண்கள் தவிர்ப்பார்கள். அதாவது, அந்த நடிகருக்கு பெண் ரசிகைகள் குறைந்து போவார்கள். இது தனக்கும் நடந்துவிடுமோ என்கிற பயம் தனுஷுக்கு வந்துள்ளதாம்.
எனவே, தற்போதுள்ள நெகட்டிவ் இமேஜ் வெற்றிமாறன் போன்ற இயக்குனரின் படத்தில் நடித்தால் போய்விடும் என கணக்குப்போட்ட தனுஷ், வெற்றிமாறனை அழைத்து ‘நாம் உடனடியாக ஒரு படத்தில் இணைகிறோம்’ எனக் கூறியுள்ளார். ஆனால், தற்போது விடுதலை படத்தை இயக்கி வருவதாகவும், அடுத்து சூர்யாவை வைத்து வாடிவால் படம் என கையில் படங்கள் இருப்பதால் நாம் உடனே இணைய முடியாது என கைவிரித்து விட்டாராம் வெற்றிமாறன்.
இதனால் அப்செட்டில் இருக்கிறாராம் தனுஷ்….