danush

நடிகர் தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளன. ஆனால், திருமணம் ஆகி 17 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தவறான முடிவு எனவும், இருவரும் மீண்டும் இணையவேண்டும் எனவும் பலரும் கோரிக்க வைத்தனர். ஆனால், இருவரும் தங்கள் வழியில் நடக்க துவங்கிவிட்டனர்.

danush

தனுஷ் ஒருபக்கம் படங்களில் நடிக்க, ஐஸ்வர்யா ஒரு ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இதற்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். இந்த வீடியோ இன்று யுடியூப்பில் வெளியானது.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்து ‘எனது தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.