சூர்யா தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படம் சில வருடங்களுக்கு முன்பு விருதாச்சலம் அருகே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை ரசிகர்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என பல்வேறு துறையை சார்ந்தவர்களும் பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் இப்படத்தை பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ‘ஜெய்பீம் திரைப்படம் குரலற்றவர்களுக்கான குரலாக ஒலித்துள்ளது. இயக்குனரின் எதார்த்தமாக அணுகுறையை பாராட்டியே ஆக வேண்டும். நடிப்பை தாண்டி சமூகத்தின் மீது சூர்யா காட்டும் கருணை பாராட்டத்தக்கது. சக்தி வாய்ந்த படங்கள் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பது ஜெய்பீம் திரைப்படம் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என பாராட்டியிருந்தார்.