ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், கஜோல் உள்ளிட்ட பலரும் நடிக்க துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. ஆனால், படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் இறந்த நிலையில், சிறிது நாள் மட்டும் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதன்பின், தற்போது மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும், பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளதுதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், அப்படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை எனவும், தேர்தல் பிரச்சாரம் இருப்பதால் ஏப்ரலுக்கு பின் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால், தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவின் மகன் ராம் சரண் மற்றும் பவன் கல்யாணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் கூறிய கதை ராம் சரணுக்கு பிடித்துள்ளதாம். தற்போது, பவன் கல்யாணின் சம்மதத்திற்காக காத்திருக்கிறார் ஷங்கர். எல்லாம் சரியாக அமைந்தால் இந்த வருட இறுதியில் இப்படம் டேக் ஆப் ஆகும் எனக் கூறப்படுகிறது.